search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு படைவீரர்கள் குவிப்பு"

    சத்தீஸ்கரில் நாளை நடைபெறவுள்ள முதல் கட்ட தேர்தலின் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் படைவீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
    ராய்ப்பூர்:
     
    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 90 இடங்களை கொண்ட சத்தீஸ்கரில் நாளை (12-ம் தேதி) மற்றும் 20-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நாளை முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்தீஸ்கர் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அஜித்ஜோகி கூட்டணி இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் 190 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.



    சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார், டி.வி. கேமராமேன் உள்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளதால், வாக்குப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்காக துணை ராணுவத்தினர், போலீசார் என சுமார் ஒரு லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். #ChattisgarhAssemblyElections #FirstPhaseCampaign
    ×